×

தண்டுக்கீரை காரக்குழம்பு

தேவையான பொருட்கள்

தண்டுக்கீரை – 1 கட்டு
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
பூண்டு பல் – 6
மிளகாய்த்தூள் ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – கால் கப்
புளி நெல்லிக்காய் அளவு.

வறுத்து அரைக்க

தனியா – அரை டேபிள் ஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்.

தாளிக்க

கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை

வறுக்க கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். இதனை தேங்காய்த் துருவலுடன் அரைத்து வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளித்து பூண்டு, வெங்காயம், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். இதனுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய தண்டுக்கீரையைச் சேர்த்து வதக்கவும். இப்போது மிளகாய்த்தூள், அரைத்த விழுது மற்றும் தேவையான புளி தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். உப்பு சரிபார்க்கவும். தண்டுக்கீரை வெந்து, எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை நிறுத்தி இறக்கினால் சுவையான தண்டுக்கீரை காரக்குழம்பு தயார்.

The post தண்டுக்கீரை காரக்குழம்பு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்